News March 1, 2026
பிரேமலதா முடிவு.. திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்னும் தேமுதிக அழைக்கப்படவில்லை. இதனிடையே, 6+1 என கேட்ட பிரேமலதாவிடம், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்களைப் பொறுத்து 8 வரை கொடுப்பதாக ஸ்டாலின் உறுதியளித்தாராம். அதேநேரம், பிரேமலதா அளித்த தொகுதிப் பட்டியலை அறிந்து, ஏற்கெனவே அங்கு காய் நகர்த்திவரும் திமுக & அதன் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனராம். உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 2, 2026
தமிழகத்தில் குறைவான குற்றங்கள்: கனிமொழி

தமிழகத்தில் அதிக குற்றச் சம்பவங்கள் நடப்பதாக <<19351175>>பியூஷ் கோயல்<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் குறைவு தான் என்று கனிமொழி பதிலளித்துள்ளார். தமிழகத்தில் குற்றம் நடந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரக்கூடிய ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News April 2, 2026
இதுவே கொடிய சனாதனம்: சீமான் கூறுவது என்ன?

வாரிசு அரசியலின் பூர்வகுடியே திமுக & காங்., தான் என்று சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை பரப்புரையில் பேசிய அவர், கருணாநிதிக்கு பிறந்ததாலேயே ஸ்டாலினுக்கு CM பதவி; இதுவே கொடிய சனாதனம் என்றும் அவர் சாடினார். ஈழத்தமிழரை அழிக்க ஆயுதம் கொடுத்த காங்.,க்கு திமுக உதவி செய்ததாக குறிப்பிட்ட அவர், இரு கட்சிகளுமே கூட்டுக் களவாணிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
News April 2, 2026
வேல்முருகன் தலைமையில் புதிய கூட்டணி உருவானது

தமிழர் வாழ்வுரிமை கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதாக வேல்முருகன் அறிவித்துள்ளார். 35-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகள், 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் இக்கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தவாகவுக்கு கேமரா சின்னம் ஒதுக்கிய நிலையில், கூட்டணி கட்சிகள் அவர்களின் சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்கப்படும் எனவும் கூறினார்.


