News January 14, 2026
பிரேமலதா டிமாண்ட்: ADMK- DMDK கூட்டணி பேச்சு இழுபறி

திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை கட்டமைக்கும் வகையில், தேமுதிகவை அதிமுக பக்கம் கொண்டுவர சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். அதில், அதிமுக தரப்பு 10+ தொகுதிகள் தர ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதைவிட ஒரு தொகுதி கூடுதலாக கொடுக்க வேண்டும் என பிரேமலதா டிமாண்ட் வைத்துள்ளாராம். இதனால், கூட்டணி பேச்சில் இழுபறி நீடிக்கிறதாம்.
Similar News
News January 18, 2026
இந்திய பந்துவீச்சை நொறுக்கும் மிட்செல்!

இந்தியாவுக்கு எதிராக ODI-ல் தனது 4-வது சதத்தை டேரில் மிட்செல் பதிவு செய்து அசத்தியுள்ளார். 3-வது ODI-ல் 60 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து NZ தடுமாறினாலும், மிட்செல்-பிலிஃப்ஸ் இணைந்து 140+ ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி வருகின்றனர். இதில், மிட்செல் 10 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி சதம் அடித்துள்ளார். NZ-ன் ரன்ரேட்டை கட்டுப்படுத்த, மிட்செலை IND உடனடியாக அவுட் செய்வது அவசியம்.
News January 18, 2026
1500 குழந்தைகளை மீட்ட பெண் இன்ஸ்பெக்டர்!

கடந்த 3 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்ட RPF இன்ஸ்பெக்டர் சந்தனா சின்ஹாவுக்கு Ati Vishisht Rail Seva Puraskar என்ற இந்திய ரயில்வேயின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. லக்னோவின் சார்பாக் ரயில் நிலைய இன்ஸ்பெக்டரான அவர், 2024-ல் 494 & 2025-ல் 1,032 குழந்தைகளை மீட்டுள்ளார். தனியாக நிற்பவர்கள் & கடத்தல் கும்பலிடம் சிக்கிய குழந்தைகளை நுட்பமாக கவனித்து, அதிரடியாக மீட்பதே அவரது ஸ்டைல்.
News January 18, 2026
மாணவர்களுக்கு விடுமுறை.. கூடுதல் பஸ்கள் இயக்கம்

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சிரமமின்றி சென்னை திரும்ப ஏதுவாக இன்று 5,192 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக <


