News January 22, 2026

பிரேமலதாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!

image

NDA கூட்டணி முழு வடிவம் பெற இன்னும் 24 மணிநேரமே இருக்கிறது. நாளை PM மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற அதிமுக-பாஜக மும்முரமாக செயல்படுகின்றன. தற்போது வரை தேமுதிகவும், புதிய தமிழகமும் தங்களது முடிவை அறிவிக்காமல் களத்திற்கு வெளியே உள்ளனர். இன்று புதிய தமிழகம் NDA-வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிரேமலதா அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மெளனம் காக்கிறார்.

Similar News

News February 10, 2026

காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

image

தினமும் காலையில் எழுந்ததும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் நாளின் தொடக்கத்தில் வெந்நீர் குடித்து தொடங்குவது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு மிதமான வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

News February 10, 2026

கூட்டணி அறிவிப்பு எப்போது? கிருஷ்ணசாமி பதில்

image

கூட்டணி குறித்து வரும் பிப்.14-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சிந்தனையே இல்லை என்றார். தனித்தொகுதிகளில் மட்டுமே போட்டி என்ற வரலாற்றை உடைக்க விரும்புவதாகவும், 2026-ல் அமையும் ஆட்சியில் புதிய தமிழகம் பங்கு பெற வேண்டும் என்பதே இலக்கு எனவும் கூறியுள்ளார்.

News February 10, 2026

தூங்கி எழுந்ததும் போன் பார்ப்பவரா நீங்க?

image

இந்த பழக்கம் உங்கக்கிட்ட இருந்தா, இச்செய்தி உங்களுக்குதான். காலை எழுந்ததும் மொபைல் பார்க்கும் பழக்கம் நமது மன அழுத்தத்தை அதிகரிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இரவில் வரும் மெசேஜ்கள், தவறவிட்ட செய்திகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக காலையில் படிக்கும்போது அது தேவையற்ற மனப்பதற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் அன்றைய நாள் முழுவதும் நாம் ஒருவித அழுத்தத்திலேயே இருக்க நேரிடுகிறது.

error: Content is protected !!