News November 23, 2025

பிரேசில் முன்னாள் அதிபர் கைது

image

பிரேசிலின் முன்னாள் அதிபர் போல்சனாரோ, அந்நாட்டு போலீஸால் இன்று கைது செய்யப்பட்டார். முன்னதாக, 2022 தேர்தல் தோல்வியை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட வழக்கில் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக சிறை செல்ல சில நாள்களே இருக்கும் நிலையில், போலீஸ் அவரை கைது செய்துள்ளனர். இதனால் அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News January 29, 2026

2015-ல் வந்தது செயற்கை வெள்ளம்: CM ஸ்டாலின்

image

சென்னை பெருநகரில், ₹6,495 கோடியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னையில் 2015-ல் செயற்கை வெள்ளம் உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது இயற்கை எவ்வளவு மழை தந்தாலும் சமாளிக்கும் ஆற்றலை சென்னைக்கு உருவாக்கி உள்ளோம் என்றார். மேலும், மக்களின் தேவையை புரிந்துகொண்டு மெட்ரோ வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது திமுக அரசுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

ஒரே நாளில் வெள்ளி விலை கிலோ ₹25,000 உயர்ந்தது

image

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம் தொட்டு நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹25 உயர்ந்து ₹425-க்கும், 1 கிலோ வெள்ளி ₹25,000 உயர்ந்து ₹4.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடரும் விலை ஏற்றத்தால் வரும் நாள்களிலும் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 29, 2026

கமல் கட்சிக்கு புதிய சிக்கல்

image

கமலின் மநீம-வுக்கு ECI டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொதுச்சின்னம் ஒதுக்கப்படும் என்பதால், மநீம டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட இயலாது. எனவே, மநீம வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாம்.

error: Content is protected !!