News July 26, 2024

பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

image

தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூா்சாமி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் நிரந்தர பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே மையத்தில் நடைபெறுகிறது. அதன்படி, 20-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 7, 2026

காரைக்காலில் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி

image

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் நகர காவல் நிலையத்தில் இன்று (07.03.26) காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் மன்றம் எனும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை நேரில் அளித்து தீர்வு காணலாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 6, 2026

புதுச்சேரியில் 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மின்-ஆளுமை சங்கம் இணைந்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கில், IT மற்றும் ITES நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசு மற்றும் முன்னணி IT, ITES நிறுவனங்களுக்கிடையில், மொத்தம் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

News March 6, 2026

புதுச்சேரி: முதலமைச்சர் தலைமையில் ஊதியம் வழங்கல்

image

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் பாங்கோஸ் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை, (Gratuity) காசோலைகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.

error: Content is protected !!