News January 2, 2026
பிரியாணியுடன் புத்தாண்டு கொண்டாடிய இந்தியர்கள்!

புத்தாண்டுக்கு முந்தைய நாள் (டிச.31) மாலை முதல் இரவு வரை அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளை Swiggy பகிர்ந்துள்ளது. அதில் வழக்கம் போல், 2.19 லட்சம் ஆர்டர்களுடன் பிரியாணி முதலிடத்திலும், 90,000 ஆர்டர்களுடன் பர்கர் 2-ம் இடத்திலும் உள்ளது. ஆச்சரியமாக இந்த பட்டியலில் உப்புமாவும் (4,244 ஆர்டர்கள்) இடம்பிடித்துள்ளது. டீ இல்லாமல் கொண்டாட்டமா எனும் வகையில், 26,618 கப் டீக்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News January 31, 2026
தேமுதிகவுக்காக குரல் கொடுக்கும் அதிமுகவினர்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற அதிமுகவினர் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளதாம். கடந்த மக்களவை தேர்தலில் கைகொடுத்தது தேமுதிக தான் என்றும், அதன் காரணமாக திருக்கோவிலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை விட அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் பேசி வருகின்றனர். அத்துடன் தேமுதிகவுடன் EPS நேரடியாக பேச வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
News January 31, 2026
ஐடி சோதனையால் தொழிலதிபர் தற்கொலை!

ரியல் எஸ்டேட் நிறுவனமான Confident குழுமத்தின் நிறுவனர் சி.ஜே. ராய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித் துறை சோதனைகள் குறித்த அச்சம் காரணமாக பெங்களூரில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் தற்கொலை செய்ததாகவும், கேரளாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்திய சில மணி நேரங்களுக்கு பிறகு இத்துயரம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 31, 2026
மாதத்திற்கு எவ்வளவு எண்ணெய் பயன்படுத்தலாம்?

சமையலில் உணவின் சுவைக்கும், நறுமணத்துக்கும், எண்ணெய் முக்கியமானது. ஆனால் அதனை அளவோடு பயன்படுத்துவதே நல்லது. டாக்டர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒரே மாதத்திற்கு அரை லிட்டர் (500 மில்லி) எண்ணெய் பயன்படுத்த வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு சுமார் 2 – 3 ஸ்பூன் எண்ணெய் மட்டுமே செலவாகும். அதுவே 4 பேர் கொண்ட குடும்பம் என்றால் ஒரு மாதத்திற்கு சுமார் 2 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தலாம் என்கின்றனர்.


