News December 24, 2025
‘பிரியங்கா காந்தியிடம் இந்திரா காந்தியை பார்க்கின்றனர்’

ராகுல், பிரியங்கா ரத்தத்தில் அரசியல் கலந்திருப்பதாக பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இருவரும் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கின்றனர்; கடினமாக உழைக்கின்றனர். நாட்டிற்காக அன்புக்குரியவர்களை இழந்திருக்கின்றனர் என்றார். மேலும், பிரியங்கா காந்தியிடம் மக்கள் இந்திரா காந்தியை பார்ப்பதாகவும், அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
நான் சாதிக்கு எதிரானவன்: மாரி செல்வராஜ்

சிவகாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் பேசி கொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்கள் விசிலடித்தும் கைதட்டியும் ஆரவாரம் செய்தனர். அப்போது, இந்த கொண்டாட்டங்கள் அனைத்துமே சாதிக்கு எதிரானதாக இருந்தால் தான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று மாரி கூறினார். எதிர்காலத்தில், ஒருவேளை அரசியல் கட்சி (அ) அமைப்பை தொடங்கினாலும் தான் என்றைக்கும் சாதிக்கு எதிராகவே செயல்படுவேன் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
News December 29, 2025
தங்கம், வெள்ளி சரிவு.. விலை ₹4,000 குறைந்தது

<<18700210>>தங்கம் விலை<<>> இன்று(டிச.29) சவரனுக்கு ₹640 குறைந்த நிலையில், வெள்ளியும் கிராமுக்கு ₹4 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விலையில் வெள்ளி 1 கிராம் ₹281-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹4,000 குறைந்து ₹2,81,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) வெள்ளியின் விலை 1.10 டாலர்கள் சரிந்ததால், இந்திய சந்தையில் இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 29, 2025
பொண்ணு எங்க வந்துச்சி.. புண்ணுதான் வந்துச்சி

சென்னையில் வடமாநில இளைஞர் ஒருவர், ஃபேஸ்புக்கில் உல்லாசத்திற்காக பெண் வேண்டும் என கேட்டு மர்ம நபருக்கு ₹28,000 பணம் அனுப்பியுள்ளார். பெண் வராததால், ஃபேஸ்புக் ஆசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை வாங்கி, அதில் சர்க்கரை கலந்து கையில் தேய்த்துக்கொள், பெண் வருவார் என கூறியுள்ளனர். இதனை அந்த இளைஞர் செய்ய, கையில் புண் தான் வந்துள்ளது. பின்னரே, இது ஃபேக் ஐடி என தெரிய வந்துள்ளது.


