News April 1, 2025
பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைக்கும் ஆலயம்

நாமக்கல், திருச்சொங்கோட்டில் அர்த்தநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, உடலில் ஒரு பாதி ஆணாகவும், மறுபாதிப் பெண்ணாகவும் சிவபெருமாள் உள்ளார். இக்கோவில் சென்று சிவனை வழிபட இல்லறவாழ்வில் பிரிந்து வாழும் தம்பதிகள், மீண்டும் வாழ்வில் சேர்ந்து வாழ்வாதகாக சொல்லப்படுகிறது. மேலும், திங்கள், பௌர்ணமி, அமாவாசை முதலான நாட்களில் வீட்டில் அர்த்தநாதீஸ்வரரை விளக்கேற்றி வழிபடத் தம்பதிகளின் அன்னோனியம் பெருகுமாம்.
Similar News
News April 2, 2025
நாமக்கலின் திருப்பதி பெருமாள் கோவில்

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீக்கும் மேலும் திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் சுமையில் உள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 2, 2025
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்ட வானிலையை பொறுத்தவரையில், இன்று ஒரு மி.மீட்டரும், நாளை (வியாழன்) 5 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 7 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.6 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 2, 2025
நாமக்கல்லில் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 01.04.2025 அன்று வெளியிட்ட TNPSC GROUP – 1 தேர்விற்கான 70 காலிப்பணியிடங்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 08.04.2025 முதல் மதியம் 2.30 முதல் 5.30 வரை இலவச பயிற்சி வகுப்பு, மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பும் மனுதாரர்கள், <