News December 17, 2025
பிரித்வி ஷாவின் சோகத்தை மறக்க வைத்த டெல்லி அணி

IPL மினி ஏலத்தின் முதல் செட்டில் பிரித்வி ஷாவை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த பிரித்வி ஷா, இதயம் உடைந்த ஸ்மைலியுடன் ’IT’S OK’ என இன்ஸ்டாவில் விரக்தியுடன் பதிவிட்டிருந்தார். ஆனால் அடுத்த ரவுண்டில் பிரித்வி ஷாவை டெல்லி அணி அடிப்படை விலையான ₹75 லட்சத்துக்கு வாங்கியது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் பழைய பதிவை நீக்கிவிட்டு, BACK TO MY FAMILY என போஸ்ட் செய்துள்ளார்.
Similar News
News December 19, 2025
ஆஸ்கர் ரேஸில் ஹோம்பவுண்ட்: எத்தனை பேர் பாத்துட்டீங்க?

கொரோனா காலகட்டத்தில் வட இந்தியாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்தே தங்களது சொந்த ஊரை சென்றடைந்த செய்தி ஞாபகம் இருக்கா? அச்சம்பவம், வேலையில்லா திண்டாட்டம், சாதி-மதம், முதலாளித்துவ கொடுமைகளை ‘ஹோம்பவுண்ட்’ படம் சித்தரித்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் தகுதிப் பட்டியலில் இணைந்துள்ள இப்படத்தை எத்தனை பேர் பாத்துட்டீங்க.. இன்னும் பாக்கலனா பாருங்க!
News December 19, 2025
BREAKING: செங்கோட்டையன் பாணியில் அடுத்த தலைவர்

பொதுவெளியில் கட்சித் தலைமைக்கு எதிராக பேசியதாகவும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் GK மணிக்கு அன்புமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு அவர் விளக்கம் அளித்தால் அன்புமணியை தலைவராக ஏற்பதுபோல் அமையும். இல்லை எனில் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது போல, GK மணி பாமகவிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. பாமகவில் தந்தை-மகன் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 19, 2025
CINEMA 360°: 2025-ம் ஆண்டின் சிறந்த கலைஞராக துருவ் தேர்வு

*கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. *நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு நேற்று பூஜை நடைபெற்றது. *துருவ் விக்ரம், 2025-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


