News March 26, 2024

பிரான்ஸ் செல்லும் திருவள்ளுவர் சிலை

image

பிரான்சில் இயங்கி வரும் திருவள்ளுவர் கலைக்கூடத்தில் வரும் ஏப். 13 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக மாமல்லபுரம், வடகடம்பாடி தனியார் சிற்பக்கூடத்தில் உலோக சிற்ப பிரிவின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ராஜேந்திரன் வடிவமைத்த 200 கிலோ எடை கொண்ட 4 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் வெண்கல சிலை நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News

News February 10, 2026

திருவிடந்தை பொதுக்கூட்டம்: ECR சாலையில் போக்குவரத்து மாற்றம்.

image

தமிழ்நாடு முதலமைச்சர் நாளை பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருவிடந்தை ECR சாலையில் நடைபெறுகிறது. நாளை காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை சென்னை – புதுச்சேரி மற்றும் புதுச்சேரி – சென்னை மார்க்கங்களிலும் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் கோவளம் – கேளம்பாக்கம் – சிறுசேரி – நாவலூர் – திருப்போரூர் வழியாக மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

News February 10, 2026

செங்கை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

செங்கல்பட்டில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

image

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதியின் வேளாண்மைப் பொறியியல் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். SHARE!

error: Content is protected !!