News January 2, 2026
பிராந்திய மொழிகளை கற்க வேண்டும்: மோகன் பகவத்

குறைந்தபட்சம் நம் வீடுகளிலாவது தாய்மொழியில் பேச வேண்டும் என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள் அங்குள்ள பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அனைத்து இந்திய மொழிகளும் தேசிய மொழிகள் தான் என குறிப்பிட்ட அவர், அவை அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் உண்டு என்றார்.
Similar News
News February 7, 2026
சேலம் மாவட்டம் : பிப்.07 இரவு ரோந்து காவலர்கள் விபரம்

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிப்ரவரி 07 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட எண்ணை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் ச
News February 7, 2026
நடிகர் பொன்னம்பலத்திற்கு விஷம்.. பரிதாப நிலை

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம், தனது நிலைக்கு கூட பிறந்த அண்ணனே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். குடும்ப பிரச்னையால் தன்னுடைய உதவியாளரை வைத்து ரசத்தில் குதிரை பொடியை கலந்து கொடுத்துவிட்டதாகவும், இதனால் 3 வருஷமாக பேதி ஏற்பட்டு உடம்பே வீணாகிவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் பீரில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.
News February 7, 2026
வோடபோன் ஐடியா சூப்பர் பிளான் அறிமுகம்!

வோடபோன் ஐடியா (Vi) ‘நான்-ஸ்டாப் ஹீரோ’ என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் 4G/5G டேட்டா & ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ₹365(28 நாள்கள்), ₹649(56 நாள்கள்), ₹979(84 நாள்கள்) திட்டங்களுடன் அதிவேக இணையத்தை அனுபவிக்க முடியும். சில திட்டங்களில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT சலுகைகளும் அடங்கும்.


