News May 1, 2024
பிரம்மாண்ட உணவக கப்பல் அறிமுகம்

கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி, முதல் தளம் திறந்த வெளி, மேல்தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் 200 பேரைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு இந்த உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2026
செங்கல்பட்டு மாவட்டம்- ஓர் பார்வை

மாநகராட்சி-1 (தாம்பரம்), நகராட்சி-4 (செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-குடுவாஞ்சேரி, மதுராந்தகம்), நகர் பஞ்சாயத்து-6, பேரூராட்சிகள்-359, தாலுகா-8, ஊராட்சி ஒன்றியம்-8, வருவாய் கிராமங்கள்-636, MP தொகுதிகள்-3, MLA தொகுதிகள்-7 (செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர்), மொத்த பரப்பளவு-2,945 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News April 3, 2026
செங்கை: பட்டாக்கத்தியுடன் ‘ரீல்ஸ்’… போலீஸ் அதிரடி

செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அந்த பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள், கையில் பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ்’ வீடியோ எடுத்து, அதை ‘இன்ஸ்டாகிராமில்’ பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்களை நேற்று (ஏப்.02) கைது செய்தனர்.
News April 3, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து விவரம்!

செங்கல்பட்டு இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக ( அ ) 100 டயல் செய்து தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியின் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது.


