News December 24, 2025

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் தற்கொலை.. மனைவி கண்ணீர்

image

ஹாலிவுட் நடிகர் <<18637371>>ஜேம்ஸ் ரன்சோன்<<>>(46) தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவி ஜேமி உருக்கமாக SM-ல் பதிவிட்டுள்ளார். ‘உன்னை காதலிப்பதாக முன்பு 1,000 முறை சொல்லியிருப்பேன். மீண்டும் உன்னை காதலிப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ‘IT: சாப்டர் 2’ படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான ஜேம்ஸ், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 29, 2025

திருப்பூர்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற இங்கே<> கிளிக் <<>>செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News December 29, 2025

Handshake விவகாரம்: மீண்டும் இந்தியாவை சீண்டும் PAK

image

ஆசிய கோப்பையை தொடர்ந்து சமீபத்தில் நடந்த U-19 போட்டியிலும் PAK உடன் இந்திய அணி HandShake செய்யவில்லை. இது சர்ச்சையான நிலையில், எங்களுக்கும் கைகுலுக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என PSB Chief மோசின் நக்வி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த நடைமுறை இனி வரும் போட்டிகளிலும் தொடரும் எனவும், இந்தியா செய்வதை எல்லாம் செய்துவிட்டு நாங்கள் பின்வாங்க வேண்டும் என நினைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

News December 29, 2025

செளமியா அன்புமணியின் பதவியில் காந்திமதி

image

பசுமைத் தாயகம் அமைப்பில் இருந்து செளமியா அன்புமணியை நீக்கி, சேலத்தில் நடைபெற்று வரும் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பசுமைத் தாயகம் அமைப்பின் புதிய தலைவராக காந்திமதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் பாமக செயல்தலைவராக செயல்படுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மே 28 உடன் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததாகவும் பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!