News January 6, 2026
பிரபல வில்லன் நடிகர் காலமானார்.. குவியும் இரங்கல்

நடிகர் புன்னப்பரா அப்பச்சன்(77) மறைவுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் அப்பச்சன் மறைவால் தவிக்கும் திரைத்துறையினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என கேரள CM பினராயி விஜயன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News January 20, 2026
காங்கிரஸ் MLA-க்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல்

TN காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2026 தேர்தல் தொடர்பாக ராகுல் நடத்திய ஆலோசனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல MLA-க்கள் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது ராகுல் தன்னிடமிருந்த ரகசிய சர்வேவை காட்டி MLA-க்கள் மீதான புகார்கள், 70% பேர் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிபெறும் வாய்ப்பு பற்றி சுட்டிக்காட்டினாராம். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது.
News January 19, 2026
திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்தார்

தேர்தல் வரவுள்ளதால், மாற்றுக்கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் கொண்டுவர திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகள் போட்டி போட்டு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் இணைக்கும் படலம் தொடர்கிறது. அந்த வகையில், இன்று கோவை, ஆனைமலை மேற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர், எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
News January 19, 2026
மாணவர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையில்லையா?

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து எந்த கவலையும் இல்லாமல், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக விமர்சித்த அவர், அடக்குமுறை மூலம் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.


