News November 6, 2025
பிரபல ராப் பாடகர்கள் PHOTOS

பீட்ஸ், ரிதமிக் வார்த்தைகள், வேகமாக பாடுவது ஆகியவை ராப் இசை மீதான ஈர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலகம் முழுவதும் ராப் இசைக்கு பல மொழிகள் இருந்தாலும், ஹே, யோ – என்பது ராப் கலையின் அடையாளமாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் சில ராப் இசை கலைஞர்களின் போட்டோக்களை, மேலே பகிர்ந்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த ராப் பாடல் எது? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News February 1, 2026
தருமபுரி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04342-260042) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.
News February 1, 2026
பட்ஜெட்டில் இந்த முக்கிய அறிவிப்பு இல்லை: பிரேமலதா

யானை பசிக்கு சோளப்பொறிதான் இந்த பட்ஜெட் என பிரேமலதா விமர்சித்துள்ளார். தங்கம் வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என்று பேசிய அவர், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வதால் வரி குறைப்பு போன்ற அறிவிப்புகள் இருந்திருக்கலாம் என்றார். அத்துடன், தேர்தல் நேரம் என்பதால் மக்கள் அதிகமாக எதிர்பார்த்ததாகவும், அதில் ஓரளவு மட்டுமே நடந்திருப்பது ஏமாற்றம்தான் எனவும் கூறியுள்ளார்.
News February 1, 2026
தைப்பூசம் விடுமுறை.. தமிழக அரசு கூடுதலாக அறிவித்தது

தைப்பூசம் விடுமுறையையொட்டி ஊர்களுக்கு செல்ல, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து 2 நாள்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது ஊருக்கு சென்றவர்கள் பணியிடங்களுக்கு திரும்ப ஏதுவாக, பல பகுதிகளில் இருந்து இன்று கூடுதல் பஸ்களை அரசு இயக்கி வருகிறது. சிறப்பு பஸ்களில் பயணிக்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து நெரிசலின்றி பயணியுங்கள்!


