News August 26, 2024

பிரபல ரவுடியால் ஊருக்குள் பிரச்னை

image

புதுச்சேரி திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது ஜாமினில் வந்துள்ள ரவுடி கோபியால் மண்ணாடிப்பட்டு பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவுகிறது. அவரை ஊருக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, திருக்கனுார் போலீசார், சப் கலெக்டருக்கு நேற்று பரிந்துரை செய்துள்ளனர்.

Similar News

News March 11, 2026

புதுவை: தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

image

காரைக்கால், கீழ காசாக்குடியைச் சேர்ந்தவர் வேம்பு. இவரது மூத்த மகன் ராகவன், கோட்டுச்சேரி மெக்கானிக் கடை ஒன்றில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடி போதையில் இருந்த ராகவனை, அவரது தாய் வேம்பு கண்டித்ததால் மனமுடைந்த ராகவன் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 11, 2026

புதுச்சேரி: முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று அறிவித்தார்.

News March 11, 2026

புதுச்சேரி: மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர்

image

புதுச்சேரி, மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில், ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!