News December 8, 2025
பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் கல்யாண் சாட்டர்ஜி(81) காலமானார். 1968-ல் அபஞ்சன் படத்தில் அறிமுகமான இவர், கஹானி, சுகர் பேபி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றார். நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த அவர், GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்யஜித் ரேயின் பிரதித்வந்தி உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 11, 2025
விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பதிலளித்த அவர், இது முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகள் கொண்ட உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயிலாக இது இருக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை இது முற்றிலும் தவிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
BCCI கூட்டத்தில் RO – KO குறித்து ஆலோசனை

ரோஹித், கோலியின் ஒப்பந்தங்களை திருத்துவது பற்றி வரும் 22-ம் தேதி நடைபெறும் BCCI பொதுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல், உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கான சம்பளம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. ஜடேஜா, பும்ராவுக்கு நிகராக சுப்மன் கில் A+ பிரிவில் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. BCCI தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வானதை அடுத்து நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
News December 11, 2025
ரூமி பொன்மொழிகள்

*வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *உங்கள் இதயத்திற்கு வழி தெரியும். அந்தத் திசையில் ஓடுங்கள். *வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.


