News January 22, 2026
பிரபல பாடகி ஜானகியின் மகன் காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா (65) காலமானார். பரதநாட்டிய கலைஞரான இவர், ’விநாயகுடு’, ‘மல்லேபுவ்வு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவு எஸ்.ஜானகி உள்பட அவரது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பு சகோதரரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பாடகி சித்ரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
பள்ளிகள் நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

<<18985799>>காரைக்கால்<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ரவி பிரகாஷ் அறிவித்துள்ளார். மஸ்தான் சாஹிப் தர்கா (பெரிய பள்ளிவாசல்) கந்தூரி விழாவையொட்டி, நாளை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேநேரத்தில், 10, +2 மாணவர்களுக்கு நாளை செய்முறை தேர்வு இருந்தால், அதில் மாற்றம் இருக்காது. அதனால், செய்முறை தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். SHARE IT.
News January 28, 2026
விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியம்

விலங்குகள் கடித்தால் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கீரிப்பிள்ளை கடியால் பாதிக்கப்பட்ட சிறுவன் 3 மாதம் கழித்து உயிரிழந்ததை அடுத்து, சுகாதாரத்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். பூனை, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகள் கடித்தால் ரேபிஸ் பரவும் என்பதால், உடனடியாக தடுப்பூசி செலுத்துவது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
News January 28, 2026
தேமுதிக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்: விஜயபிரபாகரன்

கூட்டணி யாருடன் என முடிவாகாத நிலையில், தேமுதிக இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளர். நேற்று சிவகாசியில், 2006-ல் சிவகாசி தொகுதியில் தான் தேமுதிக அதிக வாக்குகள் பெற்றதாகவும், மீண்டும் அங்கு உழைக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். இதனால் அவர் சிவகாசியில் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில், தேமுதிக கூட்டணி யாருடன் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.


