News January 25, 2026

பிரபல பாடகர் மாரடைப்பால் காலமானார்

image

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான அபிஜித் மஜும்தார்(54) மாரடைப்பால் இன்று காலமானார். ஒடியா திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த அபிஜித், 57 படங்களில் பணியாற்றி கிட்டத்தட்ட 700 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தனது இசையால் ஒடிசா மக்கள் மட்டுமின்றி, இந்திய அளவில் கவனம் ஈர்த்த அபிஜித்தின் திடீர் மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

Similar News

News February 2, 2026

பாகிஸ்தானின் குற்றச்சாட்டை விமர்சித்த இந்தியா

image

பலுசிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தங்களது உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே பாகிஸ்தான் இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக விமர்சித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

News February 2, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News February 2, 2026

குழந்தைகளுடன் பேசுங்கள்

image

பெற்றோர் – குழந்தைகள் இடையே இணக்கமான உறவு இல்லாததே, குழந்தைகளின் ஆளுமைத்திறன் குறைபாடு முதல் தற்கொலை எண்ணம் வரை பல பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பதும், தேவைகளை நிறைவேற்றுவதும், கல்வி அளிப்பதும் மட்டும் பெற்றோரின் கடமை அல்ல. அவர்களின் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப அவர்களுடன் நல்ல புரிதலை ஏற்படுத்தி, வழிகாட்ட வேண்டும். வேறு என்னவெல்லாம் செய்யலாம்?

error: Content is protected !!