News January 14, 2026
பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

<<18560243>>பிரபல பாடகர் ஜுபின் கார்க்<<>>கின் மரணத்திற்குப் பின்னால் எந்த மர்மமும் இல்லை என்று சிங்கப்பூர் போலீஸ், அந்நாட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ‘ஜுபீன் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது மதுபோதையில் இருந்ததாகவும், லைப் ஜாக்கெட் பயன்படுத்தவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
கோலியை பாலோ பண்ணுங்க: கவாஸ்கர்

இளம்வீரர்கள் கோலியின் ஆட்ட பாணியை பின்பற்றி விளையாட வேண்டும் என Ex கிரிக்கெட்டர் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய அணி ODI தொடரை இழந்தது. 3-வது போட்டியில் ஒற்றை ஆளாக ரன்கள் குவித்த கோலி குறித்து பேசிய கவாஸ்கர், இன்னிங்ஸை நிதானமாக கட்டமைத்து பின்னர் ரன் குவிப்பில் கவனம் செலுத்தும் அவரின் ஆட்டத்தை இளம் வீரர்கள் பாடமாக எடுத்து கொண்டு பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
News January 21, 2026
NASA-ல் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(60) NASA-ல் இருந்து ஓய்வு பெற்றார். 3 முறை விண்வெளிக்கு பயணித்துள்ள அவர், மொத்தம் 608 நாள்கள் அங்கு கழித்தார். மேலும், 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளி நடைப்பயணங்களையும் (9 முறை) அவர் மேற்கொண்டுள்ளார். 1998-ல் NASA-ல் சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். டிசம்பர் 27-ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றுள்ளதாக NASA அறிவித்துள்ளது.
News January 21, 2026
திமுகவில் இணைகிறார்.. விஜய்க்கு அதிர்ச்சி

ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் தவெகவுக்கு செல்லவிருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், களநிலவரம் மாறி மூவரும் தற்போது திமுகவில் இணையவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் OPS-ம் திமுகவில் விரைவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


