News November 22, 2025
பிரபல பாடகர் காலமானார்.. திரையுலகினர் சோகம்

‘Paper Te Pyaar’ பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமான பஞ்சாப் பாடகர் ஹர்மன் சித்து(37) சாலை விபத்தில் காலமானார். காரில் அவரது சொந்த கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, லாரியில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், ஹர்மன் சித்துவின் கார் அப்பளம்போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே அவரும் துடிதுடித்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
Similar News
News January 21, 2026
மனைவியை அடித்து கொன்றுவிட்டேன்.. WhatsApp Status!

‘என் வாழ்க்கையின் பாதியை கொன்றுவிட்டேன்’ என மனைவியை கொன்று கணவர் WhatsApp Status வைத்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த ஆஞ்சநேயலு, வேலையை ராஜினாமா செய்ய பணப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவி சரஸ்வதியுடன் தகராறு ஏற்படவே, கோபத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை, ஆஞ்சநேயலு அடித்து கொலை செய்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஏற்கெனவே, <<18436075>>கோவையில் <<>>இதே போல, சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
News January 21, 2026
அடுத்தடுத்து இணைந்தனர்.. செங்கோட்டையன் அதிர்ச்சி

அதிமுகவில் இருப்பவர்களை தவெகவுக்கு அழைத்துவரும் அசைன்மென்ட்டை கையில் எடுத்திருக்கிறார் செங்கோட்டையன். ஆனால் இதில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், KAS பேச்சுவார்த்தை நடத்திய மருது அழகுராஜ், சின்னசாமி, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர். இதனால் செங்கோட்டையன் சற்றே அதிர்ச்சியில் இருப்பதாக பேசப்படுகிறது.
News January 21, 2026
NDA கூட்டணியில் இணைந்த TTV… EPS மிஸ்ஸிங்!

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் <<18913412>>NDA கூட்டணியில் TTV தினகரன் <<>>இணைந்துள்ளார். சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அங்கு மத்திய அமைச்சர் L முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக கட்சி தலைவர்கள் மட்டுமே இருந்தனர். எனினும் கூட்டணியின் முக்கிய தலைவரான EPS உள்ப்ட அதிமுக மூத்த தலைவர்கள் யாரும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.


