News November 10, 2025

பிரபல நடிகை வீட்டில் பதற்றம்… போலீஸ் குவிந்தது

image

<<18247000>>நடிகை த்ரிஷா<<>> வீட்டை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சச்சு வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இ-மெயில் மூலம் போலீஸுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, சச்சு வீட்டில் குவிந்த போலீஸார், மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

Similar News

News March 30, 2026

நாகை: 3 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.‌ நாகை தொகுதியில் மாவட்டச் செயலாளர் சுகுமார் போட்டியிடுகிறார். கீழ்வேளூரில் செந்தில்பாண்டியன், வேதாரண்யத்தில் கிங்ஸ்லி ஜெரால்ட் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் தவெக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதை அடுத்து கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

News March 30, 2026

திமுக கிளை அமைப்பு தவெக: MP இன்பதுரை

image

ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்ற மனநிலையில் விஜய் இருப்பதால், 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிமுக ராஜ்யசபா MP இன்பதுரை விமர்சித்துள்ளார். திமுக தலைமை அலுவலகம் மாநகர் பகுதியிலும், கிளை அமைப்பான தவெகவின் அலுவலகம் புறநகர் பகுதியான பனையூரிலும் இருக்கிறது என சாடிய அவர், தவெக என்பது திமுகவின் B டீம்; அதிமுக வெற்றியை தடுக்கவே தவெக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 30, 2026

FLASH: காய்கறிகள் விலை தலைகீழாக குறைந்தது

image

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை மீண்டும் கடும் சரிவை கண்டுள்ளது. 1 கிலோ தக்காளி ₹8 – ₹15, கேரட் ₹12 – ₹30, கத்திரிக்காய் ₹15, முருங்கைக்காய் ₹10 – ₹30, பீட்ரூட் ₹20- ₹25, சின்ன வெங்காயம் ₹30 – ₹40, இஞ்சி ₹50 – ₹65, எலுமிச்சை ₹100 – ₹120 என விலை தலைகீழாக குறைந்து விற்பனையாகிறது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

error: Content is protected !!