News January 17, 2026
பிரபல நடிகை காலமானார்

நடந்து சென்ற பிரபல ஹாலிவுட் நடிகை கியானா அண்டர்வுட் (33) மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘All That’ என்ற சீரிஸில் 7 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், The 24 Hour Woman, Death of a Dynasty ஆகிய படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரது இறப்புக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
தமிழகத்திற்கு திமுகவால் அவப்பெயர்: அருண்ராஜ்

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்பதை முடிவு செய்து, அதன் பட்டியலை ஒரு வாரத்திற்குள் பரிந்துரைக்குமாறு திமுக அரசுக்கு SC உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாக தவெக அருண்ராஜ் தெரிவித்துள்ளார். டிஜிபி நியமனம் குறித்து தவெக கேட்ட போதெல்லாம் CM கண்டும் காணாமல் இருந்தார் என்றும், ஒரு டிஜிபியைக் கூட முறையாக நியமனம் செய்ய முடியாத மாநிலம் என TN-க்கு திமுக அவப்பெயரை தேடி தந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News February 12, 2026
ஒரே ஒரு இட்லி ₹100

பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் விற்கப்படும் இட்லியின் விலை இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உணவகத்தின் விலை பட்டியலில் 4 இட்லிகள் ₹50 என்றும், ஆனால் ஒரே ஒரு இட்லி ₹100 என்றும் உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினாலும், 2 இட்லியை விட 4 இட்லி வாங்க வைக்கும் வியாபார உத்தியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், நெட்டிசன்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
News February 12, 2026
கர்ப்பிணிகளே தவறாமல் இந்த பழத்தை சாப்பிடுங்கள்

கர்ப்பிணிகளே, நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க தினமும் 1 கொய்யா பழத்தை சாப்பிடுங்கள். ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட அதிகமாக வைட்டமின் C, இரும்புச் சத்து, புரதம், பொட்டாசியம் போன்றவை இதில் இருக்கின்றன. இது, நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரையை சரியாக வைக்கவும் இது உதவுகிறது. கொய்யாவை நீங்கள் குளிர்காலத்திலும் சாப்பிடலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர்.


