News January 16, 2026
பிரபல நடிகை காலமானார்

பிரபல பெங்காலி நடிகை ஜெயஸ்ரீ கபீர் உடல்நலக்குறைவால் லண்டனில் காலமானார். சத்யஜித்ரேவின் ‘பிரதித்வந்தி’ படம் மூலம் அறிமுகமான இவர், 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி வங்கதேசத்திலும் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார். திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், லண்டனில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் கட்.. ஏன் தெரியுமா?

உ.பி.,யில் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 68,000-க்கும் அதிகமான அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி சொத்துகளை சேர்க்கும் ஊழியர்களை கண்டறியும் விதமாக அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செய்தியை SM-ல் பதிவிட்டு, தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடவடிக்கை எடுத்தால் எப்படி இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து?
News February 3, 2026
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்!

*எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது *நல்லவன் படகில் போகும் போது துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கினால், நதியேத் திசை மாறி அவன் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் *ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் *துன்பங்களை வளர்ப்பதும் தனிமைதான். தணிப்பதும் தனிமைதான்.
News February 3, 2026
அரிதிலும் அரிது.. நீங்கள் காணாத உலக அதிசயம்

வெவ்வேறு விளையாட்டுகளின் உலகக் கோப்பை தொடர்களில் ஆடிய 3-வது நபர் என்ற பெருமையை இத்தாலியின் வெய்ன் மேட்சன் பெற்றுள்ளார். 2006-ல் தென்னாப்பிரிக்க அணிக்காக ஹாக்கி உலகக் கோப்பையில் ஆடிய இவர், தற்போது டி20 WC-ல் இத்தாலியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இதற்கு முன்பாக ரூடி வான் ( ரக்பி + கிரிக்கெட் ) மற்றும் எல்லிஸ் பெர்ரி ( கால்பந்து + கிரிக்கெட் ) உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கின்றனர்.


