News November 16, 2025
பிரபல நடிகை காலமானார்

பிரபல பெங்காலி நடிகையான பத்ரா பாசு (65) கொல்கத்தாவில் காலமானார். கடந்த சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் பிரபல நாடக இயக்குநரும் நடிகருமான அசித் பாசுவின் மனைவியாவார். வங்கா நாடகம் மற்றும் சினிமா இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். அவரது மறைவிற்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
மூன்று திசைகளில் பார்வையை பதித்த விஜய்

SIR-க்கு எதிராக தவெக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 2-ம் கட்ட தலைவர்களை களமிறக்கியுள்ளார் விஜய். தலைநகர் சென்னையில் புஸ்ஸி ஆனந்த், கொங்கு மண்டலமான கோவையில் அருண்ராஜ், தென்மண்டலமான மதுரையில் நிர்மல்குமார் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 2-ம் கட்ட தலைவர்கள் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யவும், கட்சியினருக்கு நம்பிக்கை அளிக்கவும் விஜய் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
News November 16, 2025
பிரபல நடிகை மரணம்.. நடிகர் கண்ணீருடன் இரங்கல்

மறைந்த பழம்பெரும் நடிகை <<18284857>>காமினி<<>> குறித்து நடிகர் சாகித் கபூர் எமோஷனலாக பேசியுள்ளார். கபீர் சிங் படத்தில் காமினியுடன் நடித்த அனுபவங்களை நினைவுக்கூர்ந்த சாகித், அவருடன் பணிபுரிந்தது ஒரு பாக்கியம் என கூறியிருக்கிறார். மேலும் காமினி ஒரு அற்புதமான கலைஞராக எப்போதும் நினைவுகூரப்படுவார் எனவும், அவர் மிகவும் கனிவானவர் மற்றும் அன்பானவர் என்றும் சாகித் கபூர் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
தவெக + காங்., கூட்டணியா? செல்வப்பெருந்தகை பதில்

தவெக உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக எழுந்த பேச்சுகளுக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். ராகுல் காந்தியும், விஜய்யும் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாகவும், கூட்டணி குறித்து ஆலோசிப்பதாகவும் வரும் தகவல்கள் பொய் என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இவையெல்லாம், தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக சிலர் கிளப்பிவிடும் தகவல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


