News November 4, 2025
பிரபல நடிகை காலமானார்

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை டயான் லாட் (89) காலமானார். ‘Alice Doesn’t Live Here Anymore’ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘Wild at Heart’ (1990), ‘Rambling Rose’ (1991) திரைப்படங்களுக்காக அவரது பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கள் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News November 4, 2025
BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்

வேலூர், திருப்பூர் மாவட்ட திமுகவில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகள் அடங்கிய வேலூர் தெற்கு மாவட்டத்திற்கு AP நந்தகுமார் செயலாளராகவும், காட்பாடி, KV குப்பம் தொகுதிகளை கொண்ட வேலூர் வடக்கு மாவட்ட செயலாளராக கதிர் ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர்(கி) மா.செ.,-வாக பத்மநாபன், திருப்பூர்(மே) மாவட்ட செயலாளராக கே.ஈஸ்வரசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News November 4, 2025
டிசம்பர் 1-ம் தேதி முதல் விலை உயருகிறது?

வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல், வாடிக்கையாளர்களுக்கு Jio, Airtel, VI
நெட்வொர்க்குகள் அதிர்ச்சி தரவுள்ளன. ஆம், ரீசார்ஜ் கட்டணங்களை 10- 12 % வரை இந்நிறுவனங்கள் உயர்த்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை, ₹199 ரீசார்ஜ் பிளான், இனி ₹222 ஆகவும், ₹899 ஆக ரீசார்ஜ் பிளான், இனி ₹1006 ஆக உயர்த்தப்படும் எனவும் கூறப்படுகிறது. நீங்க மாதம் எவ்வளவுக்கு ரீசார்ஜ் பண்றீங்க? 
News November 4, 2025
ABD-யிடம் அட்வைஸ் கேட்கும் இந்திய கேப்டன் SKY!

T20 & ODI பார்மெட்களை எப்படி பேலன்ஸ் செய்வது என AB டிவில்லியர்ஸிடம் அறிவுரை கேட்டுள்ளார் இந்திய T20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். T20-ல் நன்றாக விளையாடினாலும், ODI-ல் தான் தடுமாறுவதாக குறிப்பிட்ட அவர், இப்பேட்டியை பார்த்தால் AB டிவில்லியர்ஸ் தன்னை உடனடியாக அணுகி அட்வைஸ் தர வேண்டும் என கூறினார். மேலும், இரு பார்மெட்டுக்கு மத்தியில் தன்னால், சமநிலையை பெறமுடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


