News January 18, 2026
பிரபல நடிகர் காலமானார்

‘Kung Fu Hustle’ என்ற படத்தில் ‘Beast’ ரோலில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் லியுங் சியு-லுங் (77) காலமானார். ‘The Legendary Fok’ மற்றும் ‘Fist of Fury’ ஆகிய சீரிஸ்களில் இவரது Chen Zhen கதாபாத்திரம் இன்றுவரை பெரிதும் ரசிக்கப்படுகிறது. Kung Fu கலையை ஸ்டைலாக வெளிப்படுத்திய இவரது மறைவை தன்னால் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ முடியவில்லை என லெஜண்ட் ஜாக்கி சான் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
தமிழக வாக்காளர் பட்டியல்: அவகாசம் நீட்டிப்பு

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் SIR பணிகள் முடிக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இன்றுவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், SC உத்தரவின்பேரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிப்.9 வரை அவகாசத்தை நீட்டித்து ECI அறிவித்துள்ளது.
News January 30, 2026
என்னது.. குறட்டை விட்டால் Heart Attack வருமா!

நாம் சாதாரணமாக நினைக்கும் குறட்டை, இதய ஆரோக்கியத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கத்தின்போது காற்றுப்பாதை அடைபட்டு, சுவாசிக்க முடியாமல் போவதால் குறட்டை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, காலப்போக்கில் இதயம் பாதிப்படையும். இது நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.
News January 30, 2026
பிப்ரவரி 1-ம் தேதி முதல் வரும் மாற்றங்கள்!

பிப். 1-ம் தேதி, *மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது *6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எந்த பரிவர்த்தனையும் இல்லாத ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் செயலற்றதாக மாறும் *கார், ஜீப் & வேன்களுக்கு வழங்கப்படும் FASTag-களுக்கு KYC தேவையில்லை என NHAI தெரிவித்துள்ளது *ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாக மாறும்.


