News November 6, 2025
பிரபல நடிகர் காலமானார்… குவியும் இரங்கல்

புற்றுநோய் பாதிப்பால் காலமான பிரபல கன்னட நடிகர் ஹரிஷ் ராய்(55) மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். KGF படத்தில் காசிம் சாச்சா பாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஹரிஷின் மறைவு பெரும் சோகம் என்றும், அவரது இழப்பு கன்னட திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாதது எனவும் கர்நாடக DCM சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். RIP
Similar News
News November 6, 2025
மணிக்கட்டு வலிக்கு என்ன செய்யலாம்

நம் கைகள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மணிக்கட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. மணிக்கட்டு வலியை தவிர்க்க, சிறிய உடற்பயிற்சிகள் அவசியம். இவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நரம்புகளை தளர்த்தி, இயக்கத்தை எளிதாக்கும். தினசரி சில நிமிடங்கள், மணிக்கட்டு பயிற்சிக்கும் ஒதுக்கவும். என்னென்ன உயற்பயிற்சிகள் செய்யலாம் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.
News November 6, 2025
SBI PO பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

பொதுத்துறை வங்கியான SBI-ல் காலியாக உள்ள 541 Probationary Officer (PO) பணியிடங்களுக்கான, மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை <
News November 6, 2025
’பாஜக நிர்வாகிக்கு மூளை மழுங்கிப்போச்சு’

மும்பையில் இஸ்லாமியர்கள் மேயராக வரமுடியாது என பாஜக நிர்வாகி அமீத் சதாம் கூறியதற்கு உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த ஆனந்த் துபே பதிலடி கொடுத்துள்ளார். மும்பை பாஜக தலைவரானதில் இருந்து அமீத்துக்கு மூளை மழுங்கிப்போனதாக சாடிய அவர், பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இப்படி பேசுகிறார் என கூறினார். இதனையடுத்து பாஜக நிர்வாகியை சாடிய ஆனந்தே, மராத்தி இந்துதான் மும்பையில் மேயராக வருவார் எனவும் கூறியுள்ளார்.


