News February 16, 2025

பிரபல நகைக்கடையில் திருடிய பெண் கைது

image

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில், ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லையென அக்கடையின் நிா்வாகி சீனிவாசன் (35) சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். போலீசார் கேமராக்களை ஆய்வு செய்து, சின்னக்காஞ்சிபுரம் பல்லவா்மேடு பகுதியைச் சேர்ந்த ரமாதேவி (48) என்பவரை கைது செய்தனா். திருடிய ரூ.2.5 லட்சம் மதிப்புடைய வைர வளையல் உள்ளிட்டவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

Similar News

News August 5, 2025

காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்ச்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் தமிழ்ச்செம்மல் விருதுக்கு https://tamilvalarchithurai.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (அ) மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

News August 5, 2025

ஐடிஐ சேர்க்கைக்கான தேதி நீட்டிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான தேதி இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. மாதம் 750 ரூபாய் கல்வி உதவித்தொகை , இலவச மிதிவண்டி ,சீருடை, பயிற்சி கட்டணம் இல்லை, இலவச பேருந்து பயணம் என பல சலுகைகள் உள்ளது.

News August 5, 2025

காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்களே…

image

காஞ்சிபுரத்தில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <>லிங்கில்<<>> சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17309369>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!