News December 31, 2025
பிரபல தமிழ் பாடகி காலமானார்

பருத்திவீரன் படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த இவர் பல கிராமிய பாடல்களை பாடி புகழ்பெற்றவர். இவர் மாட்டுத்தாவணி, தெனாவட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கிராமப்புற பாடல்கள் பாடி ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். அதில் கலைமாமணியும் ஒன்று.
Similar News
News January 2, 2026
தவெகவில் இணைந்தார் அதிமுக Ex MLA ஜேசிடி பிரபாகர்

தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். அண்மையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இப்போது, ஜேசிடி பிரபாகரும் தவெக பக்கம் திரும்பி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News January 2, 2026
காயத்தால் தவிக்கும் TN நட்சத்திரம் சாய்சுதர்சன்

விஜய் ஹசாரே தொடரில் ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய்சுதர்சன் காயமடைந்துள்ளார். ரன் எடுக்க ஓடியபோது கீழே விழுந்த அவருக்கு, விலா எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூரு centre of excellence-ல் சிகிச்சையில் உள்ள சாய் சுதர்சன் வேகமாக குணமடைந்து வருகிறாராம். IPL தொடங்குவதற்கு முன் அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 2, 2026
‘ஜனநாயகன்’ டிக்கெட் வாங்க ரெடியா?

ஜன. 9-ம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், நாளை டிரெய்லர் வெளியாகவுள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் 4-ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு, மற்ற மாநிலங்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


