News March 4, 2025

பிரபல கவிஞர் நந்தலாலா காலமானார்

image

திருச்சி வயலூர் சாலையில் வசித்து வந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் இலக்கியவாதி கவிஞர் நந்தலாலா சற்றுமுன் உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். அவரது இறப்புக்கு அரசியல்வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் இன்று இரவு திருச்சிக்கு எடுத்து வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News August 15, 2025

திருச்சி: கடன் தொல்லை நீங்க வேண்டுமா?

image

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 15, 2025

திருச்சி: ரூ. 45,000 சம்பளத்தில் கிராம வளர்ச்சி வங்கி வேலை!

image

திருச்சி: Engineering படித்தவர்களுக்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) தமிழ்நாட்டில் Supervisors உள்ளிட்ட 63 பணியிடங்கள் நிரப்படவவுள்ளது. மாத சம்பளமாக Rs.45,000 வழங்கப்படும். கல்வி தகுதி B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்<>. இங்கே கிளிக்<<>> செய்து 6.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT NOW

News August 15, 2025

தங்க பதக்கம் வென்ற திருச்சி மாவட்ட காவலருக்கு பாராட்டு

image

தமிழ்நாடு காவல்துறையினருக்கு மாநில அளவிலான திறனாய்வு போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது ‘Scientific aids in investigation’ பிரிவில் நடைபெற்ற போட்டியில், கல்லக்குடி காவல்நிலைய தனிப்பிரிவு காவலர் விஜயகுமார் தங்க பதக்கம் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் பதக்கம்(ம)சான்றிதழை வழங்கினார்.

error: Content is protected !!