News April 2, 2025
பிரபலமான காளை உயிரிழப்பு: ரசிகர்கள் சோகம்

வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக் கொம்பு காளை உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. எருது விடும் விழாக்களில், இந்த காளை பல பரிசுகளை வென்றுள்ளது. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு இதன் ஆட்டம் வியப்பாக இருக்கும். ஒரு போட்டியில் ஒரு கொம்பை இழந்தாலும், இன்னொரு கொம்புடன் களத்துக்கு வந்து சீறிபாய்ந்ததை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. இதன் மறைவால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
Similar News
News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் <
News April 3, 2025
லாரி மோதி பயங்கர விபத்து

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் ESI மருத்துவமனை எதிரில் லாரி ஒன்று இரண்டு மினி ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொருவர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். லாரி ஓட்டி வந்த ஒட்டுனர் தப்பி ஓடியதால் விபத்து குறித்து முக்காண்டபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 3, 2025
கார் மின்கம்பத்தில் மோதி விபத்து

திருபத்தூர், ஆம்பூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் சாம்குமார் (19) மற்றும் அவருடன் 4 பேர் நேற்று போச்சம்பள்ளி அடுத்த செல்லக்குட்டப்பட்டி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்பு சந்தூர் கிராமத்திற்கு சென்ற போது, திருவயலூர் என்ற இடத்தில் கார் திரும்பியது அப்பொழுது எதிர்பாரவிதாமாக மின்கம்பம் மீது மோதி சாலையில் விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக 4 பேரும் உயிர்தப்பினர்.