News April 26, 2025
பிரபலங்களை கவர்ந்த கத்திரிக்காய்

வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமத்தில் பயிர் செய்யப்படும் முள்கத்திரிக்காய் மிகவும் பிரபலம். இலவம்பாடி கத்திரிக்காய் என அழைக்கப்படும் இதன் சுவை காரணமாகவே பலரை விரும்ப வைத்துள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோரும் இதை விரும்பி சாப்பிட்ட பெருமை இலவம்பாடி கத்தரிக்காய்க்கு உண்டு. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 27, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணிபுரியும் அனைத்து பணியிடங்களிலும் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் படி 4 பேர் கொண்ட புகார் குழு அமைத்திட வேண்டும். மேலும் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். குழு அமைக்கப்பட்ட விவரத்தை tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 26) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 26, 2025
மேல்மலையனூருக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 35 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 65 பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்