News May 17, 2024
பிரதான அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் 143 அடிஉச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணை மற்றும் 156 அடி உச்சநீர் மட்டம் கொண்ட சேர்வலாறு ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 256 கன அடி நீர், 118 அடி உச்சநீர் மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 245 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
நெல்லை: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <
News September 16, 2025
விகேபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

விக்கிரமசிங்கபுரம் கட்டபொம்மன் காலணியில் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது.குப்பை கிடங்கில் நேற்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த அம்பை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் அங்கிருந்து கிளம்பிய புகையால் கட்டபொம்மன் காலணியில் உள்ளவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
News September 16, 2025
நெல்லை: விபத்தில் வாலிபர் பலி

நெல்லை, நாங்குநேரி அருகே வடக்கு புளியங்குளத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி நண்பர்கள் இருவருடன் பைக்கில் மேலப்பாளையம் ஆமீன் புறம் 7வது தெரு அருகே சென்றார். அப்போது பைக்கும் லோடு ஆட்டோவும் மோதின. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த மந்திரமூர்த்தி உயிரிழந்தார். விபத்துக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.