News April 2, 2025
பிரதமர் வருகை.. ட்ரோன் பறக்கத் தடை – ஆட்சியர்

பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
மதுரை: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News August 13, 2025
மதுரை: இது முக்கியம்.. உடனே பண்ணுங்க.!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <
News August 13, 2025
மதுரை மாநகராட்சி மேயர் கணவர் GH-ல் அட்மிட்

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடந்த விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தற்போது பொன்வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் விசாரணைக்காக அவர் மதுரை அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தற்போது இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.