News January 2, 2026
பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரி வருகை!

புதுச்சேரியில் மக்களுக்கு நேற்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, “பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரி வர இருக்கிறார். அப்போது, புதுச்சேரி வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை அறிவிக்கிறார். புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மக்களின் ஆதரவோடு அமையும்.” என்று அவர் குறிப்பிட்டார்.
Similar News
News January 6, 2026
புதுவை: தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் மோசடி

நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை செல்போன் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி, கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்தி தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு தனியார் நிறுவன ஊழியர் சம்மதம் தெரிவித்து, அந்த பெண் கேட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 6, 2026
புதுச்சேரி: காரைக்கால்-திருவாரூர் ரயில் சேவை ரத்து

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, காரைக்கால்-திருவாரூர் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 6, 2026
புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின் தடை

புதுச்சேரியில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட மின் துறையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (06.01.2026) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாரதியார் ரோடு, வண்டிக்கார தெரு, நேரு வீதி, மாதா கோவில் வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என காரைக்கால், நகரம் I மின்துறை உதவிப் பொறியாளர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


