News March 25, 2026
பிரதமர் மோடி அறிவிப்பால் மக்கள் பீதி: ஸ்டாலின்

எரிவாயு தட்டுப்பாடு பிரச்னையை ‘கொரோனா காலத்தை போல’ என <<19465826>>PM மோடி பேசியதால்<<>> மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏற்கெனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை திசை திருப்பவே தொகுதி மறுவரையறை Script-ஐ தற்போது கையிலெடுத்துள்ளதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
Similar News
News April 5, 2026
திமுகவை எதிர்க்கும் Ex திமுக வேட்பாளர்

2021 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 2,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர் TR சண்முகசுந்தரம். இம்முறை அவருக்கு சீட் கொடுக்காமல், கவிதா கல்யாண சுந்தரத்துக்கு திமுக சீட் வழங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த <<19565164>>TR சண்முகசுந்தரம் கட்சியிலிருந்து விலகிய<<>> நிலையில், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். <<-se>>#TNElection20926<<>>
News April 5, 2026
திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (திங்கள்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது. மாணவர்களே விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. SHARE IT
News April 5, 2026
அரசை ATM-ஆக பயன்படுத்திய காங்: அண்ணாமலை

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செய்யாமல், புதுச்சேரியை வெறும் ATM-ஆக மட்டுமே காங்., பயன்படுத்தியதாகவும் சாடியுள்ளார். மத்தியில் காங்., ஆட்சியில் (2004 – 2014) இருந்தபோது ₹9,000 கோடி மட்டுமே ஒதுக்கியதாகவும், பாஜக ஆட்சியில் (2014 – 2025) ₹26,0000 கோடி கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


