News March 29, 2024
பிரதமர் மோடியின் செயல் பேராபத்து

இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் இந்த ஆண்டு 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நான் கிழித்த கோட்டை தாண்டினால் கைது செய்வேன் என பிரதமர் மோடி மிரட்டுவது விபத்தோ, விபரீதமோ அல்ல. பேராபத்து எனக் கூறிய அவர், சினிமாவில் கூட இதுபோல கற்பனை செய்து பார்க்க முடியாது என்றார். ஊழல் வழக்குகளில் ஜார்க்கண்ட் முதல்வர் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News August 13, 2025
ஹிமாச்சலில் 229 பேர் பலி: சேத மதிப்பு ₹2000 கோடி

ஹிமாச்சலில் பருவமழை மற்றும் விபத்துகளால் 229 பேர் பலியாகியுள்ளனர். இதில் நிலச்சரிவு, வெள்ளம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 119 பேரும், சாலை விபத்துகளில் 110 பேரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 395 சாலைகள், 669 டிரான்ஸ்பார்மர்கள், 529 குடிநீர் திட்டங்கள் சேதமடைந்திருப்பதாகவும், மாநிலத்தின் மொத்த பொருளாதர இழப்பு சுமார் ₹2,007.4 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
News August 13, 2025
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

*புரட்சியில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களின் பங்களிப்பும் அவசியம். அப்போதுதான் உண்மையான மாற்றம் நடக்கும்.
*போராடும் நேரத்தில் அதை வீண் முயற்சி என்பார்கள், வெற்றியை அடைந்த பிறகு அதையே விடாமுயற்சி என புகழ்வார்கள்.
*கஷ்டங்கள் இல்லையெனில், போராடும் ஆவல் நமக்கு முற்றிலும் மறைந்து விடும்.
* உன்னை அதிகமாக விமர்சிக்கும் மனிதன் உன்னைப் பற்றி மிகுந்த அச்சத்துடன் இருக்கிறான்.
News August 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 426 ▶குறள்: எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. ▶ பொருள்: உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.