News September 16, 2025

பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடிக்கு எனது சார்பிலும் புதுச்சேரி மக்களின் சார்பிலும் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது சிறிய வழிகாட்டுதலின் கீழ் இந்திய வளர்ச்சி கண்ணியம் மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்தின் பாதையில் உறுதியாக முன்னேறும் என்பதில் ஐயமில்லை என்று முதல்வர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 16, 2025

புதுச்சேரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

காரைக்கால்: மதுபான கடைகளுக்கு கலால் துறை எச்சரிக்கை

image

காரைக்கால் கலால் துறை துணை ஆணையர் மதுபான கடைகளுக்கும் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- புதுச்சேரி கலால் துறை வீதி 196(E) சட்டம் 1970 படி 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மதுபான பாட்டில்கள் விற்கவோ, மதுபான கடைகளில் மது அருந்த அனுமதிப்பதோ சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 16, 2025

புதுச்சேரி பெண்களுக்கு இலவச மருத்துவ முகாம்

image

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சுகாதாரத்துறை மூலம் வருகின்ற 17/09/2025 அன்று புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் ‘ஆரோக்கியமான பெண்களே குடும்பத்தின் பலம்’ என்ற திட்டத்தினை மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி அரசு தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் துவக்க விழாவில் முதல்வர் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!