News August 20, 2024
பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் புதுச்சேரி வருகை

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மூத்த சகோதரர் சோம்பாய் மோடி இன்று புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். இவரை புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி, நாராயணன் ஆகியோர் பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
Similar News
News March 7, 2026
காரைக்காலில் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் நகர காவல் நிலையத்தில் இன்று (07.03.26) காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் மன்றம் எனும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை நேரில் அளித்து தீர்வு காணலாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 6, 2026
புதுச்சேரியில் 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மின்-ஆளுமை சங்கம் இணைந்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கில், IT மற்றும் ITES நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசு மற்றும் முன்னணி IT, ITES நிறுவனங்களுக்கிடையில், மொத்தம் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
News March 6, 2026
புதுச்சேரி: முதலமைச்சர் தலைமையில் ஊதியம் வழங்கல்

புதுச்சேரி அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் பாங்கோஸ் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் பணிக்கொடை, (Gratuity) காசோலைகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.


