News May 7, 2025
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், வாலிபர் கைது

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
Similar News
News December 19, 2025
நாகை: சட்ட நகலை தீயிட்டு எரித்து போராட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மத்திய அரசைக் கண்டித்து 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற சட்ட நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், ஒன்றியச் செயலாளர் தங்கதுரை உள்ளிட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
News December 19, 2025
JUST IN: நாகை மாவட்டத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கம்

நாகை மாவட்டத்தில் மொத்தம் 5,67,730 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், எஸ்ஆர்ஐ திருத்த பணிக்கு பிறகு 57,338 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ஆண்கள் 2,51,821, பெண்கள 2,58,545, மூன்றாம் பாலினத்தவர்கள் 26 என மொத்தம் 5,10,392 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 19, 2025
நாகை: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


