News April 6, 2025
பிரதமரை துணிச்சலுடன் எதிர்ப்பவர் முதல்வர் – அமைச்சர்

பிரதமரை துணிச்சலுடன் எதிர்த்து தமிழக உரிமைக்காக குரல் கொடுப்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஏழாயிரம்பண்ணையில் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசு தொழில் நடத்துபவர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
Similar News
News November 2, 2025
சிவகாசியில் இலவச கண் சிகிச்சை முகாம்

சிவகாசியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று(நவ.02) நடைபெற உள்ளது. SBJ கண் மருத்துவமனை & புதுத்தெரு 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் சேவுகன் இணைந்து நடத்தும் இந்த முகாம் புதுத்தெரு பேச்சிமுத்து காம்ப்ளக்ஸ் அருகில், 46வது வார்டு திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கண் சார்ந்த பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதால் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
சிவாகசி: புதிய ரவுண்டானவால் சிக்கல்

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் GH நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News November 1, 2025
விருதுநகர்: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

விருதுநகர் மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ. 25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <


