News December 6, 2024
பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

மத்திய அரசு திறன் மேம்பாட்டு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் வருகிற 9-ந் தேதி வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே ஐ.டி.ஐ. 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்தவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
வேலூர் இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 6 தாலுகாவிலும் இன்று (நவ.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை 9561 பேருக்கு எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர் மற்றும் சிறைக்காவலர், தீயணைப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நவ.9-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் பள்ளி என 3 மையங்களில் மொத்தம் 9,561 பேர் தேர்வு எழுத உள்ளனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 8, 2025
வேலூர்:தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட போலீஸ்!

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (39). இவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஊனமுற்றார். இதனால் விரக்தியடைந்த வேல்முருகன் (நவ.7) பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


