News August 31, 2025
பிரசவ வார்டில் பார்வையாளர்களுக்கு அனுமதி!

சேலம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பிரசவ வார்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தினமும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரசவ வார்டில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இல்லை என முதல்வர் தேவி மீனாள் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
சேலம்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

சேலம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
சேலத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் சேலம், கோவை, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 37 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 17) மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News September 17, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

ஈரோடு-ஜோக்பானி (பீகார்) இடையே அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரயில் வரும் செப்.25- ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சேலம், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.