News January 29, 2026
பிப்.3-ல் கூட்டணி பற்றி அறிவிப்பு: பிரேமலதா

இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காத தேமுதிக, NDA கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சென்னையில் பிப்.3-ம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று பிரேமலதா உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதேநேரம், தமிழகத்தில் உள்ள கட்சிகளுடனும், மத்திய அரசுடனும் தேமுதிக நல்ல நட்புறவுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கலாம்?
Similar News
News February 3, 2026
மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு: EPS

அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி, அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன் அண்ணா என EPS புகழாரம் சூட்டியுள்ளார். அன்றைய கொடுங்கோல் காங்., ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட வெற்றிதான், TN அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
கட்டாயம் ஒருமுறையாவது சுவைக்க வேண்டிய டீக்கள்

டீ வெறும் வார்த்தையல்ல, அது ஒரு எமோஷன். டீயை பருகுவதில்லை, சுவாசிக்கிறோம். ஒரு கப் டீ உடன், சின்ன உரையாடல், சிரிப்பு, நிம்மதி என பல அனுபவங்கள் கலந்திருக்கின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு வகையான டீ வகைகள் உள்ளன. அதில், நீங்கள் ஒருமுறையாவது சுவைக்க வேண்டிய டீக்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் உங்களுக்கு பிடித்த டீ எது?
News February 3, 2026
வெள்ளி விலை ஒரே நாளில் ₹20,000 குறைந்தது

3 நாள்களுக்கு பிறகு தங்கம் விலை உயர்ந்து ஷாக் கொடுத்தாலும், வெள்ளி விலை குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 குறைந்து ₹280-க்கும், 1 கிலோவுக்கு ₹20,000 குறைந்து ₹2.8 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து இறங்கு முகத்திலே உள்ளது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


