News February 10, 2026

பிப்.12-ல் வங்கிகள் விடுமுறையா? வந்தாச்சு UPDATE

image

மத்திய அரசைக் கண்டித்து பிப்.12-ல் பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் <<19085187>>நாடு தழுவிய ஸ்டிரைக்கை<<>> அறிவித்துள்ளனர். இதனால், சில மாநிலங்களில் அன்றைய தினம் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வங்கிகள் இயங்குமா என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதுவரை வங்கி விடுமுறை தொடர்பாக RBI எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால், பிப்.12-ல் வங்கி சேவைகள் பாதிக்கப்படாது. SHARE

Similar News

News February 13, 2026

ஜோதிடரின் பேச்சை கேட்டு தாயை கொலை செய்த பெண்!

image

ஜோதிடரின் பேச்சை நம்பிய பெண் ஒருவர் தாயை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. சுசித்ரா(33) என்பவரின் தந்தை 18 மாதங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். ஜோதிடர் ஒருவர் தாயாரே சூனியம் வைத்து தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை நம்பிய சுசித்ரா, தாயார் தூங்கி கொண்டிருந்த போது தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிவந்துவிட்டது.

News February 13, 2026

கூட்டணி கட்சிக்கு எதிராகவே கருத்து சொன்ன வைகோ

image

கூட்​ட​ணி​யில் உள்ள ஒவ்​வொரு கட்​சியும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருவதாக வைகோ கூறியுள்ளார். ஆட்​சி​யில் பங்கு, அதிக இடங்​கள் வேண்​டும் என்று கேட்பது அவர​வர் உரிமை என்ற அவர், ஆனால் தனிப்​பெரும்​பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்​கும்​போது காங்கிரஸின் இந்த கோரிக்​கை​கள் எல்​லாம் எடு​ப​டாது, ஏற்​கப்​ப​டாது என்றார். மேலும், மதிமுக இதுபோல எவ்​வித நிபந்தனையும் விதித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

வெறும் நாணயங்கள் அல்ல.. நினைவுகள்!

image

மேலே உள்ள போட்டோவில் இருப்பவை, ₹2 காசு முதல் ₹25 காசு வரையிலான நாணயங்கள் ஆகும். இவையெல்லாம், இப்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், 1990ல் பிறந்தவர்களின் மறக்க முடியாத நினைவுகள். கமர்க்கட்டு, விரலில் மாட்டிக் கொள்ளும் சுத்து மிட்டாய், தேன் மிட்டாய், பட்டாணி என அப்போதெல்லாம் சுவைத்தவை நினைவிற்கு வந்து போகிறது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது இந்த நாணயங்கள் இருந்ததா? உங்கள் நினைவுகளை சொல்லுங்க.

error: Content is protected !!