News February 3, 2026
பிப்.10-ல் பொதுக்குழு.. அன்புமணி அடுத்த ஸ்கெட்ச்

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக (அன்புமணி), வட மாவட்டங்களில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை காமராஜர் அரங்கத்தில் பிப்.10-ம் தேதி பாமக இளைஞரணியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழுவில் தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடும் அவர், சில தொகுதிகளுக்கான வேட்பாளரையும் அறிமுகம் செய்வார் என கூறப்படுகிறது.
Similar News
News February 21, 2026
சமூகநீதி வர திராவிடம் பின்புலம்: திருமாவளவன்

சமூகநீதி என்பது வறுமையை ஒழிப்பதற்கானது அல்ல; அது சமத்துவத்திற்கானது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சமூகநீதி வர திராவிடமே பின்புலம் என்ற அவர், திராவிடத்திற்கு பெளத்தம் பின்புலம் என்றார். மேலும் பெளத்தம் என்பது சமூகநீதியின் கோட்பாடு என்றும் அவர் தெரிவித்தார். காலம் காலமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் கோட்பாடே சமூகநீதி என்றும் திருமா கூறியுள்ளார்.
News February 21, 2026
தங்கம் விலை ஒரேநாளில் தலைகீழாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸுக்கு(28g) $128 அதிகரித்து $5,106 ஆக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸுக்கு $7 அதிகரித்து $84-ஆக உள்ளது. இதனால் இந்திய சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹640 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
News February 21, 2026
தினமும் காலையில் கருவேப்பிலை சாப்பிடுங்க

▶கருவேப்பிலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, தாமிரம், வைட்டமின்கள், மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. ▶கண்புரை நோய் வராமல் தடுத்து, பார்வையை மேம்படுத்த உதவும். ▶இன்சுலின் உற்பத்தி செய்ய உதவுவதோடு, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் உதவும். ▶மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாய்வு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ▶குறிப்பாக, தொப்பையை குறைக்க உதவும் என டாக்டர் கூறுகின்றனர்,


