News January 29, 2026

பிப்.1-ல் மதுக்கடைகள் இயங்காது – கலெக்டர்

image

வடலுார் இராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்.1 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள், FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 31, 2026

குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 31, 2026

குமரி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

குமரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இங்கு<> கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் ரசீது சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News January 31, 2026

குமரி: நகை கடையில் நூதன முறையில் திருட்டு

image

காஞ்சிரம்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ மணிகண்டன். இவர் சாங்கை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இருவர் வந்துள்ளனர். இருவரும் நகை வாங்குவது போல் நடித்து மூன்று கிராம் மோதிரம் மற்றும் கம்மலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!