News October 16, 2024

பின்னத்தூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண்பிணம்

image

எடையூர் காவல் சரகம் பின்னத்தூர் ECR சாலை வளைவில் அருகே இன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கண்டறியப்பட்டார். உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவர் பற்றி தெரிந்தால் முத்துப்பேட்டை டிஎஸ்பி அலுவலகம் 9498100897, காவல் நிலையம் 9498100899, சப்இன்ஸ்பெக்டர் சதிஷ் 9003952291 ஆகிய எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News September 14, 2025

திருவாரூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

image

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <>இங்கே க்ளிக் <<>>செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 14, 2025

திருவாரூர்: சிறப்பு கல்வி கடன் முகாம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்தும், உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கென சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் செப்.17 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில், மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், ஆதார் மற்றும் பான் கார்டுடன் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர்

News September 14, 2025

திருவாரூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ

image

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (32). இவர் 16 வயதுடைய சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் ஊர்நல அலுவலர் கலைவாணி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அருள்தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!