News September 1, 2025
பிசினஸில் வெற்றி பெற 7 டிப்ஸ்!

வாழ்க்கையில் முன்னேற வெற்றியாளர்கள் கூறும் டிப்ஸ். *சிறியதாய் தொடங்கி பெரியதாய் கட்டமையுங்கள். *முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதை முதலில் செய்யுங்கள். *ஒரு நாளைக்கு 3 நல்ல முடிவுகளை எடுங்கள். *முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க மறந்துவிடாதீர்கள். *இரவில் நல்ல ஓய்வு எடுங்கள். *எப்போதும் உங்களுடைய பலத்தை முழுமையாக நம்புங்கள். *கஸ்டமர்கள், ஊழியர்களுடன் நல்லுறவை உருவாக்குங்கள்.
Similar News
News September 1, 2025
BREAKING: பள்ளி ஆசிரியர்களுக்கு இனி கட்டாயம்

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
News September 1, 2025
இன்று ஒரே நாளில் ₹2000 அதிகரிப்பு

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹136-க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,36,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 25-ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை ₹3,200-ம், கிலோ வெள்ளி விலை ₹6000-ம் உயர்ந்துள்ளது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. இம்மாதத்தில் (ஆவணி) திருமணம் போன்ற சுபமுகூர்த்த நாள் அதிகளவில் வருவதால், விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
News September 1, 2025
ஒரே காரில் மோடி, புடின் பயணம்!

PM மோடி, ரஷ்ய அதிபர் புடின் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள மோடி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ரீதியாக பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் நடத்தினார். இது மறைமுகமாக டிரம்புக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. முன்னதாக மோடி, புடின், ஜி-ஜின்பிங் மூவரும் நெருக்கமாக ஆலோசித்த போட்டோவும் உலக அளவில் வைரலாகிறது.